/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பயறு உற்பத்தி பெருக்க ரூ. 19.36 லட்சம் ஒதுக்கீடுபயறு உற்பத்தி பெருக்க ரூ. 19.36 லட்சம் ஒதுக்கீடு
பயறு உற்பத்தி பெருக்க ரூ. 19.36 லட்சம் ஒதுக்கீடு
பயறு உற்பத்தி பெருக்க ரூ. 19.36 லட்சம் ஒதுக்கீடு
பயறு உற்பத்தி பெருக்க ரூ. 19.36 லட்சம் ஒதுக்கீடு
ADDED : ஜூலை 12, 2011 12:44 AM
ஈரோடு : பயறு வகை பயிர்கள் உற்பத்தி பெருக்க, ஈரோடு மாவட்டத்துக்கு 19.36 லட்சம் ரூபாய் இந்தாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்த அளவில் பயறு வகை உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளது. இங்கு மற்ற பயிர்களில் ஊடுபயிராகவே பச்சை பயறு, பாசிப்பயறு உள்ளிட்ட பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன. உற்பத்தி பாதிக்கப்படுகிறது. பயறு வகைகளை தனியாக பயிரிட்டு, உற்பத்தி பெருக்குவதற்காக மத்திய அரசு, ஈரோடு மாவட்டத்தை பயறு வகை மாவட்டமாக அறிவித்து, தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 19.36 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.வேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) மாரியப்பன் கூறியதாவது: இத்திட்டத்தில், விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், விதை வாங்கும் விவசாயிகளுக்கும் மானியம் அளிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு பயிற்சி, பாதுகாப்பு கருவி, சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் ஆகியவற்றுக்கு மானியம் உண்டு. பம்புசெட் மானியமாக 10 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


