Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/"பவர்பத்திர' கட்டணம் உயர்வு : நேற்று ரூ.50; இன்று ரூ.10 ஆயிரம்

"பவர்பத்திர' கட்டணம் உயர்வு : நேற்று ரூ.50; இன்று ரூ.10 ஆயிரம்

"பவர்பத்திர' கட்டணம் உயர்வு : நேற்று ரூ.50; இன்று ரூ.10 ஆயிரம்

"பவர்பத்திர' கட்டணம் உயர்வு : நேற்று ரூ.50; இன்று ரூ.10 ஆயிரம்

ADDED : ஜூலை 12, 2011 12:14 AM


Google News

மதுரை : பவர் பத்திரம் மூலம் மோசடி நடப்பதை தடுக்க, பதிவுக்கட்டணம் ரூ.50 என்பதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலாகிறது. முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்றதும், நிலமோசடி குறித்து அதிக புகார்கள் வந்தன. நேற்று முன் தினம் வரை தமிழகம் முழுவதும் 1,449 புகார்கள் பெறப்பட்டன. பெரும்பாலான புகார்களில், பவர் ஏஜென்ட்கள் போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பவர் பத்திரப்பதிவுக்கட்டணம் ரூ.50 என்பதால், அதிகளவில் பதிவு நடந்தன. இதனால் மோசடிகள் தான் அதிகம் நடந்தன. இனியும் நடக்காமல் இருக்க, பவர் பத்திரப்பதிவுக் கட்டணம் ரூ.50 என்பதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பவர் பத்திரம் பதிவு செய்தால் ரூ.1000 கட்டணம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலாகிறது. இதேபோல், உரிமை ஒப்படைப்பு கட்டணம், குத்தகை ஆவணம் பதிவுக்கட்டணம் உட்பட சில கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us