Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஒவ்வொரு குடும்பத்துக்கும் மருத்துவ காப்பீடு : அமலாகிறது தமிழக அரசின் புதிய திட்டம்

ஒவ்வொரு குடும்பத்துக்கும் மருத்துவ காப்பீடு : அமலாகிறது தமிழக அரசின் புதிய திட்டம்

ஒவ்வொரு குடும்பத்துக்கும் மருத்துவ காப்பீடு : அமலாகிறது தமிழக அரசின் புதிய திட்டம்

ஒவ்வொரு குடும்பத்துக்கும் மருத்துவ காப்பீடு : அமலாகிறது தமிழக அரசின் புதிய திட்டம்

ADDED : ஜூலை 11, 2011 11:11 PM


Google News
Latest Tamil News
சென்னை: 'நான்கு ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு குடும்பமும் நான்கு லட்ச ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை பெற்றுக்

கொள்ளும் வகையில், 950 வகையான சிகிச்சை முறைகளுக்கு அனுமதிக்கும், புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும். இத்திட்டம் செயலுக்கு வரும் வரை, குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கான செலவை, அரசே செலுத்தும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கை: மனிதவள மேம்பாட்டில் முக்கிய காரணிகளாக விளங்குவது தரமான கல்வி மற்றும் சுகாதாரம். அந்த அடிப்படையில், மாநிலத்தில் சுகாதாரமான சூழ்நிலையை உருவாக்க வேண்டுமெனில், அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்க வேண்டும். ஆனால், தற்போதுள்ள மருத்துவ காப்பீட்டுத் திட்டம், மக்களின் சுகாதார தேவைகளை முழுமையாக நிறைவு செய்யும் வகையில் இல்லை. இந்த காப்பீட்டுத் திட்டம், தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளும் வளர்ச்சியடையவே வழிவகுத்தது.

எனவே, அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் முழுமையான புதிய காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன். தற்போதைய காப்பீட்டுத் திட்டம், இந்த ஆண்டு ஜூலை 5ம் தேதியுடன் முடிந்தது. இந்த அரசால் புதிதாக துவக்கப்பட இருக்கும் காப்பீட்டுத் திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் வரவேற்கப்படும்.

* முந்தைய காப்பீட்டுத் திட்டத்தில், ஒரு குடும்பத்துக்கு நான்கு ஆண்டுகளுக்கு, ஒரு லட்சம் வீதம் வழங்கப்பட்டு வந்த அதிகபட்ச மருத்துவச் செலவு, இந்த புதிய திட்டத்தில், ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாயும், குறிப்பிட்ட சில நோய்களுக்கு, 1.50 லட்சம் ரூபாய் வரையிலும் அனுமதிக்கப்

படும். அதாவது, நான்கு ஆண்டுகளில், ஒரு குடும்பம் அதிகபட்சமாக, 4 லட்சம் ரூபாய்க்கான மருத்துவச் செலவை பெற இயலும்.

* முந்தைய காப்பீட்டுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த, 642 வகையான சிகிச்சை முறைகள் மாற்றியமைக்கப்பட்டு, தற்போது மருத்துவ மேலாண்மை மற்றும் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகளையும் சேர்த்து, புதிய காப்பீட்டு திட்டத்தில், 950 வகையான சிகிச்சை முறைகள்

அனுமதிக்கப்படும்.

* சிகிச்சை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளும் காப்பீட்டுக்காக வரையறுக்கப்பட்ட தொகையில் அடங்கும். மேலும், அரசு மருத்துவமனைகளின் மூலமோ, மருத்துவ முகாம்களின் மூலமோ பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு பரிசோதனைக்காக செலவிடப்பட்ட தொகை, அறுவை சிகிச்சை தேவைப்படாத பட்சத்திலும் காப்பீட்டுத் தொகையில் அடங்கும் வகையில் வழி செய்யப்படும். இவ்வாறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளாதவர்களுக்கு, ஏற்கனவே இருந்த காப்பீட்டுத் திட்டத்தில், பரிசோதனைச் செலவு வழங்க வழி செய்யவில்லை.

* நோயாளிகள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் மற்றும் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் நாளில் இருந்து, ஐந்து நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைக் கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்கான தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும். இந்த கட்டணங்களை பெற, முந்தைய காப்பீட்டுத் திட்டத்தில் வழி செய்யவில்லை.

* அறுவை சிகிச்சைக்குப் பின் தொடர் சிகிச்சை தேவைப்படும் சில வகை நோய்களுக்கு, வரையறுக்கப்பட்ட தொகை தனியாக நிர்ணயித்து வழங்கப்படும். இதுவும், முந்தைய திட்டத்தில் இடம்பெறாதது.

*அரசு மருத்துவமனைகள் மற்றும் அதன் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், தற்போதுள்ள முறைகளை மாற்றி, சிகிச்சைக்காக வரையறுக்கப்பட்ட தொகையை

தனியார் மருத்துவமனைக்கு வழங்குவது போல, அரசு மருத்துவமனைகளுக்கும் முழுமையாக வழங்கப்படும். மேலும், சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகள், அரசு மருத்துவமனைகளில் மட்டுமே அனுமதிக்கப்படும்.

* புதிய காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்படும் அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்துக்கென அனைத்து வசதிகளுடன் கூடிய தனி அல்லது சிறப்பு பகுதிகள் அமைக்கப்படும். இதனால், புதிய திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளை அதிகளவில் நாடி வருவதற்குரிய சூழல் உருவாகும்.

புதிய காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காப்பீடு நிறுவனத்தை தேர்வு செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புதிய திட்டம் துவங்குவதற்கு முன், இடைப்பட்ட காலத்தில், உடனடியாக உயிர் காப்பதற்கான சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு, தற்போதுள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ள மருத்துவச் செலவில் சிகிச்சை அளிக்க வழி செய்யப்படும். இவ்வாறு அளிக்கப்

படும் சிகிச்சைகளுக்கான மருத்துவக் கட்டணத்தை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு அரசே வழங்கும்.

புதிய காப்பீட்டுத் திட்டத்தால், தமிழக மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி கிடைப்பதை என் அரசு உறுதி செய்யும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us