/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அ.தி.மு.க., "சிட்டிங்' கவுன்சிலர்களுக்கு எதிர்ப்பு: முதல்வருக்கு பறந்தது மனுஅ.தி.மு.க., "சிட்டிங்' கவுன்சிலர்களுக்கு எதிர்ப்பு: முதல்வருக்கு பறந்தது மனு
அ.தி.மு.க., "சிட்டிங்' கவுன்சிலர்களுக்கு எதிர்ப்பு: முதல்வருக்கு பறந்தது மனு
அ.தி.மு.க., "சிட்டிங்' கவுன்சிலர்களுக்கு எதிர்ப்பு: முதல்வருக்கு பறந்தது மனு
அ.தி.மு.க., "சிட்டிங்' கவுன்சிலர்களுக்கு எதிர்ப்பு: முதல்வருக்கு பறந்தது மனு
ADDED : செப் 16, 2011 01:13 AM
உடுமலை:உடுமலை நகராட்சி அ.தி.மு.க., வார்டு கவுன்சிலர்களுக்கு வரும் உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு அளிக்க கூடாது என அக்கட்சியினர் முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.உடுமலை நகராட்சியிலுள்ள 33 வார்டுகளில் அ.தி.மு.க., சார்பில் ஆறு பேர் தற்போது வார்டு உறுப்பினர்களாக உள்ளனர். தி.மு.க., தலைமையிலான நகராட்சி நிர்வாகத்திற்கு ஆதரவாக அ.தி.மு.க., வார்டு உறுப்பினர்கள் செயல்பட்டதாக புகார் எழுந்தது.இந்நிலையில், வரும் உள்ளாட்சி தேர்தலில் 'சிட்டிங்' அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கு சீட் வழங்க கூடாது என அக்கட்சியினரே முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர். மனுவில், உடுமலை நகராட்சி நிர்வாகத்தில் தி.மு.க.,வினர் மக்களுக்கான திட்டங்களை முறையாக செயல்படுத்தவில்லை.
நகராட்சி கூட்டத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தி.மு.க., வினருக்கு ஆதரவாக அமைதி காத்தனர்.இதனால், அனைத்து கூட்டங்களும் குறுகிய நேரத்தில் விவாதமில்லாமல் நடந்தது. தி.மு.க.,வினரால் கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் எதிர்ப்பில்லாமல் நிறைவேற்ற அ.தி.மு.க.,கவுன்சிலர்கள் உறுதுணையாக இருந்துள்ளனர்.
இதனால், மக்கள் நம் கட்சி கவுன்சிலர்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.உடுமலை நகராட்சிக்கு எதிராக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னரும் நகராட்சி கூட்டங்களில் கவுன்சிலர்கள் தி.மு.க., விற்கு ஆதரவாக செயல்பட்டனர். உடுமலை நகராட்சியை இதுவரை அ.தி.மு.க., கைப்பற்றியதில்லை. இதனால், முறையான நபர்களுக்கு நகராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களாக போட்டியிட வரும் உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு வழங்க வேண்டும்', இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


