Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அம்மிக்கல்லை தலையில் போட்டு மனைவியை கொன்ற கணவன்:திருப்பூரில் நள்ளிரவில் பயங்கரம்

அம்மிக்கல்லை தலையில் போட்டு மனைவியை கொன்ற கணவன்:திருப்பூரில் நள்ளிரவில் பயங்கரம்

அம்மிக்கல்லை தலையில் போட்டு மனைவியை கொன்ற கணவன்:திருப்பூரில் நள்ளிரவில் பயங்கரம்

அம்மிக்கல்லை தலையில் போட்டு மனைவியை கொன்ற கணவன்:திருப்பூரில் நள்ளிரவில் பயங்கரம்

ADDED : ஜூலை 29, 2011 11:48 PM


Google News
திருப்பூர் : கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவி தலை மீது அம்மிக்கல்லை போட்டு, கணவர் கொலை செய்தார்; திருப்பூரில் நள்ளிரவில் நடந்த இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர், முருகம்பாளையம் சூர்ய கிருஷ்ணா நகரை சேர்ந்த பெருமாள் மகன் தெய்வம் (40); கட்டட தொழிலாளி.

இவரது மனைவி கருப்பாயி (30); திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. மூன்று மகன்கள் உள்ளனர். கருப்பாயி, பிரின்டிங் தொழிலாளி; பிரின்டிங் நிறுவனத்தில் வேலை செய்யும் மற்றொரு தொழிலாளியான முருகனுக்கும்,கருப்பாயிக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளத்தொடர்பாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர். வீட்டில் யாருமற்ற நேரத்தில், வீட்டுக்கே முருகன் வந்து, கருப்பாயியுடன் உறவை தொடர்ந்துள்ளார்.இருவரது கள்ளத்தொடர்பபை தெரிந்த தெய்வம், கருப்பாயியை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், அலட்சியப்படுத்திவிட்டு, முருகனுடன் தொடர்ந்து பழகினார். நேற்று முன்தினம் இரவு, மகன்கள் வேலைக்கு சென்றிருந்தனர். கணவன், மனைவி இருவர் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, முருகனுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பது குறித்து கருப்பாயியை தெய்வம் கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தெய்வம், வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து கருப்பாயியின் தலையில் போட்டார்; மூன்று முறை தலை மீது கல்லை போட்டுள்ளார். அதில், தலை நசுங்கிய கருப்பாயி, சில நிமிடங்களில் உயிரிழந்தார். திருப்பூர் ரூரல் போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று தெய்வத்தை கைது செய்தனர்; டி.எஸ்.பி., ராஜாராம், நேரில் சென்று விசாரணை நடத்தினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us