கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசர நிலை ஒத்திகை : இன்றும், நாளையும் நடக்கிறது
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசர நிலை ஒத்திகை : இன்றும், நாளையும் நடக்கிறது
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசர நிலை ஒத்திகை : இன்றும், நாளையும் நடக்கிறது
ADDED : ஜூலை 12, 2011 12:45 AM
சென்னை : கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை தொடர்பான அவசர நிலை ஒத்திகை இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.
சமீபத்தில், ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி தாக்குதல் காரணமாக, அங்குள்ள அணு உலைகளில் பேரழிவு ஏற்பட்டது. இதையடுத்து, இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள வேண்டிய தயார்நிலை குறித்து, இந்திய அணுமின் நிலையங்களில் ஆய்வு செய்ய, பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களில் உள்ள 18 அணு மின் நிலையங்களில், செயல்முறை பயிற்சி செய்ய, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, மகாராஷ்டிராவில் உள்ள தாராப்பூரில், கடந்த ஜூன் 10,11 ஆகிய தேதிகளில், முதல் செய்முறை விளக்கம் நடந்தது. இரண்டாவது செயல்முறை விளக்கம், ஜூன் 12 மற்றும் 13 தேதிகளில், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நடைபெற உள்ளது. அவசர நிலையை சமாளிக்க பல்வேறு துறைகளின் உயர்மட்ட ஒருங்கிணைப்பு தேவைப்படுவதை கருத்தில் கொண்டு, இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, இன்று கல்பாக்கத்தில் நடக்கும் ஒரு நாள் பணியரங்கை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய துணைத்தலைவர் ஷஷிதர் ரெட்டி துவக்கி வைக்கிறார். இதில், காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி, போலீஸ் சூப்பிரண்ட், சென்னை அணு மின்நிலைய இயக்குனர் ஆகியோர் பங்கேற்று, அவசர நிலையை எதிர்கொள்வது குறித்து விளக்குகின்றனர்.


