Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லையில் மூன்று பெண்கள் மாயம்

நெல்லையில் மூன்று பெண்கள் மாயம்

நெல்லையில் மூன்று பெண்கள் மாயம்

நெல்லையில் மூன்று பெண்கள் மாயம்

ADDED : ஜூலை 28, 2011 01:53 AM


Google News

திருநெல்வேலி : நெல்லையில் வெவ்வேறு இடங்களில் மாயமான மூன்று பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.நெல்லை டவுன் பாப்பா மேலத்தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ்.

இவர் மனைவி மாரியம்மாள்(26). இவர்களுக்கு கடந்த 2004ம்ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். சம்பவத்தன்று மாரியம்மாள் தன் மகளை அழைத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார். அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை.இதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். குடிப்பழக்கத்தை கணவர் கண்டித்ததால் மனமுடைந்து மாரியம்மாள் வீட்டில் இருந்து வெளியேறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.நெல்லை டவுன் டி.எம்.சி., காலனியை சேர்ந்த சங்கர் மகள் மலர்விழி(23). இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற மலர்விழி வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.



வி.கே.புதூர் அருகே வீராணத்தை சேர்ந்த மரியதாஸ் மகள் வேளாங்கண்ணி(19). இவர் சேரன்மகாதேவி ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் படித்துவந்தார். பழைய பேட்டையில் உறவினர் வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்றுவந்தார்.நேற்று கல்லூரிக்கு சென்ற வேளாங்கண்ணி வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. இதுகுறித்து பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us