Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஏர்-இந்தியா நிறுவனத்திற்கு மாதம் ரூ.600 கோடி நஷ்டம்

ஏர்-இந்தியா நிறுவனத்திற்கு மாதம் ரூ.600 கோடி நஷ்டம்

ஏர்-இந்தியா நிறுவனத்திற்கு மாதம் ரூ.600 கோடி நஷ்டம்

ஏர்-இந்தியா நிறுவனத்திற்கு மாதம் ரூ.600 கோடி நஷ்டம்

ADDED : ஆக 05, 2011 02:10 AM


Google News
Latest Tamil News

புதுடில்லி: ''ஏர்-இந்தியா விமான நிறுவனத்திற்கு, மாதம் 600 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது,'' என, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் வயலார் ரவி கூறினார்.



ராஜ்யசபாவில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம்: எரிபொருள் விலை உயர்வு, ஊழியர்களின் சம்பள உயர்வு, குறைந்த கட்டண விமான நிறுவனங்களின் போட்டியால், ஏர்-இந்தியா நிறுவனத்திற்கு, மாதம் ஒன்றுக்கு, 600 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.

அதாவது, ஏர்-இந்தியா நிறுவனத்தின் மாதாந்திர செலவு, 1,700 கோடி ரூபாய். வருமானம், 1,100 கோடி ரூபாய். மேலும், செயல் மூலதனம் மற்றும் விமானங்கள் வாங்குவதற்கான மூலதனத்திற்கும் அரசு வட்டி செலுத்திக் கொண்டிருக்கிறது. ஏர்-இந்தியா நிறுவன பிரச்னையை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, பல முறை கூடி ஆய்வு செய்துள்ளது. ஏர்-இந்தியா நிறுவனத்தை மறுசீரமைப்பது தொடர்பாக, விரைவில் அந்தக் குழு பரிந்துரைகளை வழங்கும். வழங்கியவுடன் அரசு நடவடிக்கை எடுக்கும். செலவை குறைக்க, ஏர்-இந்தியா நிறுவனம் ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவ்வாறு வயலார் ரவி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us