/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/குரும்பலூர் கிராம மக்கள் எம்.எல்.ஏ.,விடம் மனு அளிப்புகுரும்பலூர் கிராம மக்கள் எம்.எல்.ஏ.,விடம் மனு அளிப்பு
குரும்பலூர் கிராம மக்கள் எம்.எல்.ஏ.,விடம் மனு அளிப்பு
குரும்பலூர் கிராம மக்கள் எம்.எல்.ஏ.,விடம் மனு அளிப்பு
குரும்பலூர் கிராம மக்கள் எம்.எல்.ஏ.,விடம் மனு அளிப்பு
ADDED : ஜூலை 19, 2011 12:36 AM
பெரம்பலூர்: குரும்பலூர் இருளர் இன மக்கள் தங்களுக்கு பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் வீடு கட்டித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் எம்.எல்.ஏ., இளம்பை தமிழ்ச்செல்வனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 1991ம் ஆண்டு குரும்பலூர் கிராமத்தில் உள்ள இருளர் இனத்தை சேர்ந்த 54 குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
இந்த இடத்தில் தற்போது குடிசைபோட்டு வசித்து வருகிறோம். மழை காலங்களில் கூரை வீடுகள் ஒழுகின்றன. இதனால் குழந்தைகளுடன் பள்ளிக்கூடங்களில் தங்கும் நிலைக்கு தள்ளப்பபட்டுள்ளோம். எனவே தமிழக அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் எங்களுக்கு வீடு கட்டி தர வேண்டும். சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி, தெரு விளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ., இளம்பை தமிழ்ச்செல்வன் தமிழக அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரவும், சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி, தெரு விளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.