Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/பழைய பாடப் புத்தகம் அச்சிடும் பணி முடிய பல மாதங்களாகும்

பழைய பாடப் புத்தகம் அச்சிடும் பணி முடிய பல மாதங்களாகும்

பழைய பாடப் புத்தகம் அச்சிடும் பணி முடிய பல மாதங்களாகும்

பழைய பாடப் புத்தகம் அச்சிடும் பணி முடிய பல மாதங்களாகும்

ADDED : ஜூலை 15, 2011 01:33 AM


Google News

மதுரை : தமிழக பள்ளிகளில் சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்துவது தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது.

சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி புதிய நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் அறிக்கையை சென்னை ஐகோர்ட் ஆய்வு செய்து, தனது தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. இதற்கிடையே பழைய பாடத்திட்ட புத்தகங்களும் அச்சிடும் பணி பல மாநிலங்களில், பல அச்சகங்களில் நடந்து வருகிறது. ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை 13 கோடி பாடப்புத்தங்கள் தேவை. இவற்றை அச்சிடுவதற்கு ஆறரை மாதங்களாவது ஆகும். இதுவரை மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்புக்கான அறிவியல், தமிழ் இலக்கணம் ஆகியவையே முடிந்துள்ளன. இவை தவிர ஒவ்வொரு வகுப்புக்கும் ஏதாவது ஒரு பாடம் மட்டுமே முடிவடைந்துள்ளன. மெட்ரிக் வகுப்புகளுக்கான பழைய பாடத்திட்டங்கள் அச்சிடும் பணி முடிவடைந்து மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்பாடப் புத்தகங்களே இப்போது தயாராக உள்ளன. இவ்வகையில் இதுவரை 2 கோடி புத்தகங்களே அச்சிடும் பணி முடிந்துள்ளது. எனவே மீதியுள்ள புத்தகங்களையும் அச்சிட்டு வழங்க, குறைந்தது மேலும் 2 மாதங்களாவது ஆகலாம். எனவே கோர்ட் தீர்ப்பு வந்தாலும் அதை எப்படி செயல்படுத்துவது என அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us