/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தரமான நெல் விதைகள் உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சிதரமான நெல் விதைகள் உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி
தரமான நெல் விதைகள் உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி
தரமான நெல் விதைகள் உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி
தரமான நெல் விதைகள் உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி
ADDED : ஆக 06, 2011 01:55 AM
திருநெல்வேலி : மானூர் அருகே தரமான நெல் விதைகள் உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.மானூர் வட்டாரம் களக்குடி கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் விதை கிராம திட்டத்தின் கீழ் தரமான நெல் விதைகள் உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இப்பயிற்சி நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தேவசகாயம் தலைமை வகித்து பேசுகையில்,''விவசாயிகள் தங்கள் நீர், நில ஆதாரங்களை பாதுகாப்பதின் அவசியம் குறித்தும், விவசாயிகள் தரமான சான்று விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். மேலும் விவசாயிகள் தாங்கள் நெற்பயிரினை விதைசான்று துறையில் பதிவு செய்து விதை உற்பத்தி செய்து அதிக லாபம் பெறலாம்.''என்றார்.இந்நிகழ்ச்சியில், வேளாண்மை துணை இயக்குனர் குமாரசாமி, விதை சான்று அலுவலர் வேலுச்சாமி, களக்குடி பஞ்.,தலைவர் சுடலியம்மாள், வேளாண்மை அலுவலர் சிவகுமார்,நபிஷா, உதவி வேளாண்மை அலுவலர்கள் அருணாச்சலம், செல்வக்குமார், ஜோதிமுத்து உட்பட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை வேளாண்மை உதவி இயக்குனர் கிருஷ்ணகுமார் செய்தார்.