/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் துப்புரவு பணியாளர் பரிதாப பலிடூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் துப்புரவு பணியாளர் பரிதாப பலி
டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் துப்புரவு பணியாளர் பரிதாப பலி
டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் துப்புரவு பணியாளர் பரிதாப பலி
டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் துப்புரவு பணியாளர் பரிதாப பலி
ADDED : ஆக 01, 2011 03:43 AM
ப.வேலூர்: இரண்டு டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், துப்புரவு பணியாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மூன்று பேர் படுகாயமடைந்தனர்.ப.வேலூர் அடுத்த நல்லூர் கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் வீராசாமி (38). அவர், நாமக்கல் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று மாலை 5.30 மணிக்கு, நாமக்கல்லில் இருந்து நல்லூர் கந்தம்பாளையத்துக்கு தனது மனைவியுடன், 'டி.வி.எஸ். எக்ஸல்' மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.அப்போது, கோலாரம் அடுத்த காட்டூர் அருகே வந்தபோது, எதிரே மற்றொரு 'டி.வி.எஸ். எக்ஸல்' மொபட்டில் வந்த தம்பதியினர் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வீராசாமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.அவரது மனைவி மற்றும் மற்றொரு வாகனத்தில் வந்த தம்பதியினர் என மூன்று பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருச்செங்கோடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து நல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.