Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/திருந்திய நெல் சாகுபடிக்கு வேளாண்துறை அழைப்பு

திருந்திய நெல் சாகுபடிக்கு வேளாண்துறை அழைப்பு

திருந்திய நெல் சாகுபடிக்கு வேளாண்துறை அழைப்பு

திருந்திய நெல் சாகுபடிக்கு வேளாண்துறை அழைப்பு

ADDED : செப் 20, 2011 01:03 AM


Google News

நாமக்கல் : 'திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிர் செய்ய, தரமான சான்று பெற்ற உயர் விளைச்சல் ரங்களை பயன்படுத்த வேண்டும்' என, நாமக்கல் வேளாண் உதவி இயக்குனர் செல்வி தெரிவித்துள்ளார்.



அவர் வெளியிட்ட அறிக்கை: சம்பா நெல் சாகுபடி பருவம் துவங்கி விட்டதால், நாமக்கல் வட்டரத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிர் செய்து, அதிக லாபம் பெற அறிவுறுத்தப்படுகிறது.

இம்முறையில் பயிர் செய்யத் தரமான சான்று பெற்ற உயர் விளைச்சல் ரங்கங்களை பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கர் நடவு செய்ய, 2 கிலோ விதை போதும். மேலும் ஒரு ஏக்கர் நடவுக்கு, 1 செண்ட் அளவில் நாற்றங்கால் அமைத்தால் போதும். நடவு வயலின் ஓரத்தில், 1க்கு 5 மீட்டர் அளவில், 8 மேடைகளை அருகிலிருக்கும் மண்ணை எடுத்து, 5 செ.மீ., உயரத்திற்கு உருவாக்க வேண்டும். விதை நேர்த்தி செய்ய, 20 கிராம் சூடோமோனாஸ் மற்றும் அசோஸ்பைரில்லம் 1 பாக்கெட், பாஸ்போபாக்டீரியா 1 பாக்கெட் என்ற அளவில் கலந்து நிழலில் உலர்த்த வேண்டும். இவ்வாறு விதை நேர்த்தி செய்வதன் மூலம் விதை மூலம் பரவும் பாக்டீரியல் இலைக்கருகல், இலைப்புள்ளி மற்றும் குலைநோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்திய விதைகளை, 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி பின் முளை கட்டவேணடும். முளை கட்டிய விதையை ஒவ்வொரு மேடைக்கு, 250 கிராம் வீதம் பரவலாக விதைக்க வேண்டும். விதைத் பிறகு விதையை தாய் மண் கொண்டு லேசாக மூட வேண்டும். பின், அதற்கு நீர் தெளிக்கலாம். சுற்றியிருக்கும் பள்ளங்களில் நீர் நிரப்பலாம். மேலும், 10-14 நாட்கள் ஆனபின், நாற்றுகளை மேடை மண்ணோடு பெயர்ந்து எடுத்து நடவு செய்தல் வேண்டும். அனைத்து விவசாயிகளும் திருந்திய நெல் சாகுபடி முறையில் நாற்றங்கால் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும, தகவல் பெற உதவி வேளாண் அலுவலர் அல்லது வேளாண் அலுவலரை தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us