/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அரசு பஸ் பழுதாகி நின்றதால் விருத்தாசலத்தில் டிராபிக் ஜாம்அரசு பஸ் பழுதாகி நின்றதால் விருத்தாசலத்தில் டிராபிக் ஜாம்
அரசு பஸ் பழுதாகி நின்றதால் விருத்தாசலத்தில் டிராபிக் ஜாம்
அரசு பஸ் பழுதாகி நின்றதால் விருத்தாசலத்தில் டிராபிக் ஜாம்
அரசு பஸ் பழுதாகி நின்றதால் விருத்தாசலத்தில் டிராபிக் ஜாம்
ADDED : ஆக 29, 2011 10:14 PM
கடலூர் : விருத்தாசலத்தில் அரசு பஸ் பழுதாகி நடுரோட்டில் நின்றதால் போக்குவரத்து பாதித்தது.
விருத்தாசலம் பஸ் நிலையத்திலிருந்து நேற்று காலை 11.20 மணிக்கு ரெட்டிக்குறிச்சி கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் (டி.என். 32.என்-2230) புறப்பட்டது. பாலக்கரை அருகே வந்தபோது பஸ் பழுதடைந்து நடுரோட்டில் நின்றது. பஸ்சை அங்கிருந்து எடுக்க முடியாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, பாலக்கரை பகுதியில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் வேறு சில அமைப்புகள் சார்பில் மனித சங்கிலி போராட்டங்கள் நடந்ததால் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. உடன் அங்கிருந்த மெக்கானிக் சிலர், பஸ்சில் ஏற்பட்ட பழுதை நீக்கிய பிறகு பகல் 12 மணிக்கு பஸ், ரெட்டிக்குறிச்சி கிராமத்திற்கு புறப்பட்டுச் சென்றது. அரசு பஸ் பழுதடைந்து நடுரோட்டில் நின்றதால் விருத்தாசலத்தில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.