அமர்சிங்கிடம் விரைவில் போலீஸ் விசாரணை
அமர்சிங்கிடம் விரைவில் போலீஸ் விசாரணை
அமர்சிங்கிடம் விரைவில் போலீஸ் விசாரணை
ADDED : ஜூலை 19, 2011 10:53 AM
புதுடில்லி: ஓட்டுக்கு பணம் வழங்கிய விவகாரத்தில் அமர்சிங்கிடம் விரைவில் டில்லி போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.
கடந்த 2008ம் ஆண்டு ஐ.மு.கூட்டணி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அரசை காப்பாற்ற ஓட்டுக்கு பணம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் அமர் சிங் பெயரும் அடிபடுகிறது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக, அவரிடம் டில்லி போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.


