எம்.பி., ராஜாவை பதவி நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
எம்.பி., ராஜாவை பதவி நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
எம்.பி., ராஜாவை பதவி நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 11, 2011 10:45 PM

அவிநாசி : நீலகிரி எம்.பி., பதவியிலிருந்து ராஜாவை நீக்கக்கோரி, அவிநாசியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவிநாசி ஒன்றிய, நகர இந்து முன்னணி சார்பில், நீலகிரி தொகுதி எம்.பி., ராஜாவை, பதவி நீக்கம் செய்யக்கோரி சேவூர் ரோடு பிரிவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றியத் தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். நகரத் தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
மாநில பேச்சாளர் பிரபாகரன் பேசியதாவது: நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால், தொகுதியில் எவ்விதமான வளர்ச்சிப் பணிகளும் நடக்கவில்லை. மருத்துவ உதவி தேவைப்படுவோர் முதல் பலரும், எம்.பி.,யிடம் கடிதம் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.
சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தலைக்குனிவை ஏற்படுத்திய எம்.பி., ராஜாவை, உடனடியாக சபாநாயகர் பதவி நீக்கம் செய்து, இடைத்தேர்தல் நடத்த வேண்டும். '2ஜி' ஊழலில் தொடர்புடைய அனைவரையும் சி.பி.ஐ., விசாரணை வளையத்திற்குள் சேர்க்க வேண்டும். ஊழலுக்கு துணை போகும் காங்., கட்சியை, அடுத்த தேர்தலில் மக்கள் கண்டிப்பாக நிராகரிப்பர். இவ்வாறு பிரபாகரன் பேசினார்.