ADDED : ஜூலை 27, 2011 01:26 AM
புதுச்சேரி : கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் கல்வித்துறை அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாநிலத் தலைவர் அரிகரன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆனந்து முன்னிலை வகித்தார். சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டில் அமல்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மருத்துவம், பொறியியல் கவுன்சிலிங்கில் 50 சதவிகித இடஒதுக்கீட்டை அரசு பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.