சட்ட பல்கலை பி.எச்டி., தேர்வு ஒத்திவைப்பு
சட்ட பல்கலை பி.எச்டி., தேர்வு ஒத்திவைப்பு
சட்ட பல்கலை பி.எச்டி., தேர்வு ஒத்திவைப்பு
ADDED : செப் 17, 2011 01:22 AM
சென்னை : தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையில், நாளை(இன்று) நடப்பதாக இருந்த பி.எச்டி., தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையில், இன்று மாதிரி நீதிமன்ற (மூட் கோர்ட்) போட்டி, பல்கலை, 'சிண்டிகேட்' கூட்டம் போன்றவை நடைபெறுகின்றன.
இவற்றின் காரணமாக, நாளை (இன்று) நடைபெறுவதாக இருந்த, பி.எச்டி., மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு, வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என, பல்கலை பதிவாளர் கோபால் கூறினார்.