/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கூட்டுறவு சங்கத்தினருக்கு போனஸ் வழங்கும் விழாகூட்டுறவு சங்கத்தினருக்கு போனஸ் வழங்கும் விழா
கூட்டுறவு சங்கத்தினருக்கு போனஸ் வழங்கும் விழா
கூட்டுறவு சங்கத்தினருக்கு போனஸ் வழங்கும் விழா
கூட்டுறவு சங்கத்தினருக்கு போனஸ் வழங்கும் விழா
ADDED : ஜூலை 19, 2011 12:24 AM
அரூர் : அரூர் அடுத்த தம்பிசெட்டிப்பட்டியில், கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கும் விழா நடந்தது.
அரூர் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி தலைமை வகித்தார். குமரன் வரவேற்றார். எம்.எல்.ஏ., டில்லிபாபு, மாவட்ட பால்வளத் துணைப்பதிவாளர் ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பால் உற்பத்தியாளர்கள், 94 பேருக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 620 ரூபாய் மதிப்பிலான பால் ஊக்கத்தொகையை வழங்கி, அமைச்சர் பழனியப்பன் வழங்கி பேசியதாவது: விவசாயிகள் மேம்பாட்டுக்காக, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா கிராமப்புற ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக கறவை மாடுகளை வழங்க உள்ளார். இதன்மூலம் ஏழை நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைவர். தேர்தலின் போது, அளித்த வாக்குறுதிகள் ஒன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றப்படும். தர்மபுரி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவைத்தொகை இல்லாமல் பணம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். டாக்டர் சுந்தரேசன், ஆவின் பொதுமேலாளர் மகாதேவன், கூட்டுறவாளர் முருகன், பஞ்சாயத்து தலைவர் சிற்றரசு, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பல் கலந்து கொண்டனர்.