/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காரைக்காலில் நலத்திட்டப்பணி அமைச்சர் சந்திரகாசு துவக்கினார்காரைக்காலில் நலத்திட்டப்பணி அமைச்சர் சந்திரகாசு துவக்கினார்
காரைக்காலில் நலத்திட்டப்பணி அமைச்சர் சந்திரகாசு துவக்கினார்
காரைக்காலில் நலத்திட்டப்பணி அமைச்சர் சந்திரகாசு துவக்கினார்
காரைக்காலில் நலத்திட்டப்பணி அமைச்சர் சந்திரகாசு துவக்கினார்
ADDED : ஜூலை 11, 2011 11:39 PM
காரைக்கால் : காரைக்காலில் 35 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம் மற்றும் 9.13 லட்சம் ரூபாய் செலவில் வாய்க்கால், குடிநீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை அமைச்சர் சந்திரகாசு துவக்கி வைத்தார்.
புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத்தினருக்கு 35 கிலோ இலவச அரிசி வழங்க அறிவிக்கப்பட்டது. இதில் 11 ஆயிரத்து 500 குடும்பங்கள் கணக்கிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை வேளாண் அமைச்சர் சந்திரகாசு நேற்று முன்தினம் காரைக்கால் நெடுங்காட்டில் துவக்கி வைத்தார். நேற்று குரும்பகரம் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு 2.7 லட்சம் ரூபாய் செலவில் கொட்டகை மற்றும் கட்டட மேம்பாடு, நெடுங்காடு மணல்மேடு பேட்டில் 3.85 லட்சம் ரூபாய் செலவில் யூ வடிவ வாய்க்கால், வடமட்டம் கிராமத்தில் 2.58 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட 9.13 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்டப் பணிகளை அமைச் சர் துவக்கி வைத்தார்.