ADDED : ஜூலை 11, 2011 02:50 AM
தர்மபுரி: பென்னாகரம் அருகே, இளம் பெண்ணை கடத்தி சென்ற தொழிலாளியை போலீஸார்
கைது செய்தனர்.பென்னாகரம் அடுத்த தாண்டாவை சேர்ந்தவர் செல்வம்.
இவரது
மகள் மலர்விழி (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை கல்குவாரியில் வேலை
செய்யும் பெரிய வத்தலாபுரத்தை சேர்ந்த பிரகாஷ் (25) என்பவர் கடத்தி சென்று
விட்டதாக செல்வம் ஏரியூர் போலீஸில் புகார் அளித்தார்.இந்நிலையில்,
அப்பகுதியிலுள்ள கல்குவாரி அருகேயுள்ள ஒரு வீட்டில் மலர்விழியை அடைத்து
வைத்திருந்த பிரகாஷை ஏரியூர் போலீஸார் கைது செய்து மலர்விழியை மீட்டனர்.