Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/கனிஷ்கா விமான விபத்து: இழப்பீடை வாங்க மறுப்பு

கனிஷ்கா விமான விபத்து: இழப்பீடை வாங்க மறுப்பு

கனிஷ்கா விமான விபத்து: இழப்பீடை வாங்க மறுப்பு

கனிஷ்கா விமான விபத்து: இழப்பீடை வாங்க மறுப்பு

UPDATED : ஜூலை 12, 2011 09:10 AMADDED : ஜூலை 12, 2011 05:48 AM


Google News

டோரண்டோ: கனிஷ்கா விமான விபத்து தொடர்பாக கனடா அரசு பலியான குடும்பங்களுக்காக வழங்கிய 24 ஆயிரம் டாலர் இழப்பீட்டு தொகையினை இந்தியர்கள் வாங்க மறுத்துள்ளனர்.

ஏர்இந்தியாவின் கனிஷ்கா-182 என்ற விமானம் கடந்த 1985-ம் ஆண்டு மான்ட்ரியல் நகரிலிருந்து ‌டில்லிக்கு சென்று ‌கொண்டிருந்தத போது நடுவானில் வெடித்து சிதறியதில் 329 பேர் பலியாயினர். இந்த சதி செயல் குறித்து கனடா ஓய்வு பெற்ற நீதிபதி ஜான்மேஜர் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணை அறிக்கையில் கடந்த 1984-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த சீக்கிய கலவரத்திற்கு காரணமாக, பழிவாங்கும் செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பே காரணம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக கனடா அரசு பலியானவர்களின் குடும்பத்தினருக்க 24 ஆயிரம் டாலர் இழப்பீடாக வழங்க முன்வந்து.இதற்கு விபத்தில் பலியான குடும்பத்தினர் மறுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கனடாஅரசின் இந்த செயல் இறந்தவர்களின் ஆன்மாவை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. எங்களுக்கு நீதிகிடைக்க சர்வதேச கோர்ட், மனித உரிமை அமைப்பினையும் அணுகுவோம். அதற்காக கனடா அரசு இழப்பீடு என்ற பெயரில் எங்களை அவமானப்படுத்த வேண்டாம் என்றனர். 26 ஆண்டு சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்திரஜித் ரியாத் என்ற குற்றவாளியை மட்டும் கைது சிறையில் அடைத்துள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் சிலர் கைது செய்யப்பட வேண்டும் என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us