/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கேபிள் "டிவி' அலுவலகத்தில் போலீஸார் திடீர் சோதனைகேபிள் "டிவி' அலுவலகத்தில் போலீஸார் திடீர் சோதனை
கேபிள் "டிவி' அலுவலகத்தில் போலீஸார் திடீர் சோதனை
கேபிள் "டிவி' அலுவலகத்தில் போலீஸார் திடீர் சோதனை
கேபிள் "டிவி' அலுவலகத்தில் போலீஸார் திடீர் சோதனை
ADDED : ஆக 05, 2011 02:09 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த உள்ளூர் கேபிள் 'டிவி'க்களின் ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அந்த, கேபிள் 'டிவி' அலுவலகத்தில், நேற்று போலீஸார் திடீர் சோதனை செய்தனர் மத்திய சுகதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சராக காந்திச்செல்வன் உள்ளார். அவரது தம்பி சுரேஷ், கேபிள் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தவிர, ஆகாஷ் 'டிவி' எனும் லோக்கல் சேனல் ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். அதில், செய்திகள் ஒளிபரப்பபட்டு வந்தன. கடந்த இரு வாரங்களுக்கு முன், நாமக்கல் வந்த அரசு கேபிள் 'டிவி' வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணனிடம், மத்திய இணையமைச்சர் தம்பி சுரேஷ் மீது கேபிள் 'டிவி' சப்-ஆப்ரேட்டர்கள் புகார் செய்தனர். இச்சூழலில், சில தினங்களுக்கு முன் அரசு கேபிள் 'டிவி' ஒயர் முறைகேடாக பயன்படுத்திய குற்றத்துக்காக, சுரேஷ் மீது நாமக்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள சுரேஷை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த இரு தினங்களாக, நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த, லோக்கல் கேபிள் 'டிவி' ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை அந்த கேபிள் 'டிவி' அலுவலகங்களில் போலீஸார் சோதனையிடச் சென்றனர். அப்போது, ஒளிபரப்பு எதுவும் இல்லை என, அங்கிருந்தோர் போலீஸாரிடம் தெரிவித்தனர்.