Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/தீபிகாவின் குரல் இனி மெட்டா 'ஏஐ'யில் ஒலிக்கும்!

தீபிகாவின் குரல் இனி மெட்டா 'ஏஐ'யில் ஒலிக்கும்!

தீபிகாவின் குரல் இனி மெட்டா 'ஏஐ'யில் ஒலிக்கும்!

தீபிகாவின் குரல் இனி மெட்டா 'ஏஐ'யில் ஒலிக்கும்!

UPDATED : அக் 16, 2025 09:24 PMADDED : அக் 16, 2025 05:35 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் உரிமையாளரான மெட்டா நிறுவனத்தின் மெட்டா ஏஐ-யில் குரல் கொடுத்த முதல் இந்திய நடிகையாகி உள்ளார் பிரபல பாலிவுட் தீபிகா படுகோன்.

நவீன தொழில்நுட்ப யுகத்தில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு நாளுக்கு நாள் ஆதிக்கம் செலுத்துகிறது. இது இல்லாத துறைகளே என ஆகிவிட்டது. கூகுள், ஓபன் ஏஐ, மெட்டா, எக்ஸ் வலைதளம் ஆகிய நிறுவனங்கள் தனித்தனியே ஏஐ கொண்டுள்ளன. இதில் பல புதிய வசதிகள் செய்து தரப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மெட்டா நிறுவனம் தனது ஏஐ.,க்காக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுடன் உடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன் மூலம் மெட்டா ஏஐ சாட்பாட்களில் தீபிகா படுகோனின் குரல் ஒலிக்க உள்ளது.

இது தொடர்பாக தீபிகா படுகோனே வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அத்துடன், அவர் வெளியிட்ட பதிவில், மெட்டா ஏஐ உடன் ஒரு அங்கமாகி உள்ளேன். நீங்கள் இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் என் குரலுடன் நீங்கள் இனி ஆங்கிலத்தில் வாய்ஸ் சாட் செய்யலாம்' எனக் கூறியுள்ளார்.

இதன் மூலம் மெட்டா ஏஐ-யில் குரல் கொடுத்த முதல் இந்திய நடிகையாகி உள்ளார் தீபிகா படுகோன்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us