/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அரசு கலைக்கல்லூரியில் 3ம் கட்ட கலந்தாய்வு கூட்டம்அரசு கலைக்கல்லூரியில் 3ம் கட்ட கலந்தாய்வு கூட்டம்
அரசு கலைக்கல்லூரியில் 3ம் கட்ட கலந்தாய்வு கூட்டம்
அரசு கலைக்கல்லூரியில் 3ம் கட்ட கலந்தாய்வு கூட்டம்
அரசு கலைக்கல்லூரியில் 3ம் கட்ட கலந்தாய்வு கூட்டம்
ADDED : ஜூலை 24, 2011 01:10 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் நடக்கிறது.
கல்லூரி முதல்வர் பொறுப்பு ரங்கராஜீ வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது.
மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய் வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் நடக்கிறது. அறிவியல் சார்ந்த இளநிலை பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு 26ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. இளம் வணிகவியல், வணிக மேலாண்மை மற்றும் வரலாறு ஆகிய பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு 27ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கில பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு 27ம் தேதி மாலை 2 மணிக்கு நடக்கிறது. குறைந்த இடங்கள் உள்ளதால் மதிப்பெண் அடிப்படையிலும், இனவாரியாகவும் கலந்தாய்வு நடப்பதால் மாணவ, மாணவிகள் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கல்லூரியில் சேரலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


