/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விக்கிரவாண்டியில் பயனற்று கிடக்கும் மினி குடிநீர் தொட்டிவிக்கிரவாண்டியில் பயனற்று கிடக்கும் மினி குடிநீர் தொட்டி
விக்கிரவாண்டியில் பயனற்று கிடக்கும் மினி குடிநீர் தொட்டி
விக்கிரவாண்டியில் பயனற்று கிடக்கும் மினி குடிநீர் தொட்டி
விக்கிரவாண்டியில் பயனற்று கிடக்கும் மினி குடிநீர் தொட்டி
ADDED : ஜூலை 13, 2011 01:12 AM
விழுப்புரம் : விக்கிரவாண்டி வி.ஏ.
ஓ., அலுவலகம் எதிரே உள்ள மினி போர்வெல் டேங்க் பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.விக்கிரவாண்டி ஏ.ஓ., அலுவலகம் எதிரே பேரூராட்சி மூலம் மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இதிலிருந்த மின் மோட்டார் பழுதடைந்தது. அதை உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் சரி செய்தது. பின்னர் ஒரு மாதத்திற்கு பிறகு மினி டேங்க் பழுதடைந்ததால் மேடையிலிருந்து அகற்றி கீழே வைத்தனர். பின்னர் டேங்க் சீரமைக்கப்படாததால் பயனற்று கிடக்கிறது. இதனை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகத்தினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.