நரிக்குடி அருகே பெட்ரோல் பங்கின் ஊழியரை வெட்டி, பணம் கொள்ளை
நரிக்குடி அருகே பெட்ரோல் பங்கின் ஊழியரை வெட்டி, பணம் கொள்ளை
நரிக்குடி அருகே பெட்ரோல் பங்கின் ஊழியரை வெட்டி, பணம் கொள்ளை
ADDED : செப் 19, 2011 09:52 PM
நரிக்குடி :விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில், பெட்ரோல் பங்க் ஊழியரின் கையை வெட்டி, பணம் மற்றும் மொபைல்போனை கொள்ளையடித்து தப்பிய இருவரை, போலீசார் தேடுகின்றனர் .நரிக்குடியை சேர்ந்த கண்ணன் என்பவரது பெட்ரோல் பங்க், கே.கே.மாணிக்கம் என்ற ஊரில் உள்ளது.
இங்கு குறையறைவாசித்தானை சேர்ந்த கேசவன்,18, நேற்று ம் இரவில் பணியில் இருந்தார். இரவு 9.30 மணிக்கு டூ வீலரில் அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர், கேசவனை கத்தியால் கையில் வெட்டி,ரூ. 2000, மூன்று மொபைல்போனைகளை பறித்து சென்றனர். சம்பவம் நடந்த சற்று நேரத்திற்கு முன்தான், அன்றைய பெட்ரோல் விற்பனை வசூல் பணத்தை, கண்ணன் வீட்டுக்கு எடுத்து சென்றதால் அந்த பணம் தப்பியது.