அனைவரும் பகவத் கீதை படிக்க வேண்டும்: கர்நாடக அமைச்சர்
அனைவரும் பகவத் கீதை படிக்க வேண்டும்: கர்நாடக அமைச்சர்
அனைவரும் பகவத் கீதை படிக்க வேண்டும்: கர்நாடக அமைச்சர்
ADDED : ஜூலை 19, 2011 03:47 PM
பெங்களூரு : கர்நாடகாவில் உள்ள அனைத்து துவக்க மற்றும் உயர்நிலை பள்ளிகளில் தினமும் ஒரு மணி நேரம் பகவத் கீதை படிக்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடக மாநில துவக்க மற்றும் உயர்நிலை கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாத் ஹெக்டே கடந்த 9ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்தின் பல இடங்களில் போராட்டம் நடந்தது. இந்நிலையில்கோலாரில்நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் விஸ்வநாத ஹெக்டே, அமைச்சர் என்ற முறையில் பகவத் கீதை கற்பிக்கப்படுவதை ஆதரவு தருகிறேன். மதம் மற்றும் கலாச்சாரத்தை ஆதரிப்பதாற்காக அரசு சார்பில் உதவிகள் செய்யப்படும். இதனை யாரும் எதிர்க்கக்கூடாது. பகவத் கீதை கற்பிக்கப்படுவதை எதிர்ப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம் என கூறினார். இதனிடையே இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


