மறைந்த மாஜி முதல்வர் தொகுதிக்கு 14-ல் இடைத்தேர்தல்
மறைந்த மாஜி முதல்வர் தொகுதிக்கு 14-ல் இடைத்தேர்தல்
மறைந்த மாஜி முதல்வர் தொகுதிக்கு 14-ல் இடைத்தேர்தல்
ADDED : ஜூலை 12, 2011 02:05 AM
இட்டாநகர்: அருணாச்சல் பிரதேசத்தில் மறைந்த மாஜி முதல்வர் டோர்ஜி காண்டு போட்டியிட்ட முக்டோ சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் காலியாக உள்ளதால் அத்தொகுதிக்கு ஜூலை 14-ம் தேதி நடக்கிறது.
அருணாச்சல் பிரதேச முதல்வராக இருந்த டோர்ஜி காண்டு கடந்த மே மாதம் 4-ம் தேதி தவாங் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அதைத்தொடர்ந்து சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த ஜர்போம் காம்ளின் புதிய முதல்வராக கடந்த மே 20-ம் தேதி பொறுப்பேற்றார். இந்நிலையில் டோர்ஜி காண்டு 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தவாங் மாவட்டத்தில் உள்ள முக்டோ சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூலை 14-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இத்ததொகுதிக்கு டோர்ஜி காண்டுவின் மூத்த மகன் பீமாகாண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இவர் தற்போது நீர்பாசனத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். கடந்த ஜூன் 20-ம் தேதி இடைத்தேர்தல் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதில் வேட்பு மனு தாக்கல் 27-ம் தேதியும், வாபஸ் பெற ஜூன் 30-ம் தேதியும் அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஜூலை 14-ம் தேதியும், ஓட்டு எண்ணிக்கை 18-ம் தேதியும் நடக்கிறது.


