முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாரூதீன் மகன் மரணம்
முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாரூதீன் மகன் மரணம்
முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாரூதீன் மகன் மரணம்
UPDATED : செப் 16, 2011 12:46 PM
ADDED : செப் 16, 2011 12:33 PM
ஐதராபாத் : சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதினீன் மகன் அயாசுதீன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன். இவரது முதல் மனைவியின் மகனான அயாசுதீன் மற்றும் உறனவரின் மகன் ஆகிய இருவரும் ஐதராபாத்தில் கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற சாலை விபத்து ஒன்றில் சிக்கினர்.இவ்விபத்தில் உறவினரின் மகன் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயம் அடைந்த அயாசுதீனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றுமரணமடைந்தார்.