/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கலைக் கழக போட்டிகள் சங்கராபுரத்தில் துவக்கம்கலைக் கழக போட்டிகள் சங்கராபுரத்தில் துவக்கம்
கலைக் கழக போட்டிகள் சங்கராபுரத்தில் துவக்கம்
கலைக் கழக போட்டிகள் சங்கராபுரத்தில் துவக்கம்
கலைக் கழக போட்டிகள் சங்கராபுரத்தில் துவக்கம்
ADDED : ஆக 28, 2011 11:25 PM
சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைக்கழக போட்டிகள் துவக்க விழா நடந்தது.
பள்ளி வளர்ச்சி குழு தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர்கள் கோலக்காரன், கலியபடையாட்சி முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரபாண்டியன் போட்டிகளை துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் லட்சுமிபதி, செல்வராஜ், திருப்பதி நேரு, ராஜேஸ்வரி, வேதநாயகி, ஜகாங்கீர் நடுவர்களாக இருந்தனர். மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு நாராயணன் தலைமை தாங்கினார். குசேலன் முன்னிலை வகித்தார். அ.தி. மு.க., ஒன்றிய செயலாளர் அரசு பரிசுகள் வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் ஆரோக்யசாமி, ஆசாத் அலி, ஆசிரியர்கள் முனுசாமி, வேல்முருகன், ராஜேந்திரன், வெங்கடேசன் , அன்னக்கிளி விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.