இலங்கை பேராசிரியர் மீது கனடா தமிழர்கள் அவதூறு வழக்கு
இலங்கை பேராசிரியர் மீது கனடா தமிழர்கள் அவதூறு வழக்கு
இலங்கை பேராசிரியர் மீது கனடா தமிழர்கள் அவதூறு வழக்கு
ADDED : ஜூலை 14, 2011 03:35 AM
டோரண்டோ: இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பினர் கனடா தமிழ் காங்கிரஸ் அமைப்பு என்ற பெயரில் செயல்பட்டுவருகின்றனர் எனற சர்வதேச பயங்கரவாத அமைப்பு மற்றும் ஆராய்ச்சி குறித்து போராசியர் ரோகன்குணரத்னாவுக்கு இலங்கை வாழ் தமிழர்களான கனடா தமிழ் காங்கிரஸ் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் குணரத்னா மீது அவதூறு வழக்கும் தொடர்ந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து வெளிவரும் லக்பிமா என்ற பத்திரிகைக்கு, ரோகன் குணரத்னோ பேட்டியளித்தார். அதில் இலங்கையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட விடுதலைப்புலிகள் அமைப்பினர் , கனடா நாட்டில் உள்ள கனடா தமிழ் காங்கிரஸ் என்ற அமைப்பின் பெயரில் அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றனர் என்று பேட்டியளித்தார். இது குறித்து கனடா அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார். இதற்கு கனடாவில் வாழும் கனடா தமிழ் காங்கிரஸ் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த ரோகன்குணரத்னே, சர்வதேச அரசியல் வன்முறை, பயங்கரவாதம் பற்றிய ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பு குறித்த சிங்கப்பூர் பல்கலை. பேராசிரியராக உள்ளார். இந்நிலையில் இலங்கை வாழ் தமிழர்களான கனடா தமிழ் காங்கிரஸ் (சி.டி.சி) அமைப்பைச் சேர்ந்த 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர், அதன் இயக்குனர்களான டேவிட் பூபாலபிள்ளை, உமாசுதன் சுந்தரமூர்த்தி ஆகியோர் கொண்ட பிரதிநிதிகள், டோரண்டோ கோர்டில் ரோகன்குணரத்னே மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். இது குறித்து கனடா தமிழ் காங்கிரஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளர் டேவிட் பூபாலபிள்ளை கூறுகையில், கனடா அரசாங்கத்திலும், அரசு நிர்வாகத்திலும் கனடா தமிழ் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு உயர்பதவிகளில் உள்ளனர். அப்படிப்பட்ட இந்த அமைப்பு , எந்த வகையிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தொடர்பு கொண்டதில்லை.குணரத்னேயின் இந்த பேச்சு இலங்கை தமிழர்களை மட்டுமின்றி கனடா தமிழ் காங்கிரஸ் அமைப்பை அவனமானப்படுத்துவதற்கு சமமாகும். என்றார்.


