/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பில்லூர் 2ம் குடிநீர் திட்டம்இன்று முதல் வெள்ளோட்டம்பில்லூர் 2ம் குடிநீர் திட்டம்இன்று முதல் வெள்ளோட்டம்
பில்லூர் 2ம் குடிநீர் திட்டம்இன்று முதல் வெள்ளோட்டம்
பில்லூர் 2ம் குடிநீர் திட்டம்இன்று முதல் வெள்ளோட்டம்
பில்லூர் 2ம் குடிநீர் திட்டம்இன்று முதல் வெள்ளோட்டம்
ADDED : செப் 15, 2011 11:29 PM
கோவை:பில்லூர் 2ம் குடிநீர் திட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று
முதல் 15 நாட்களுக்கு சோதனை ஓட்டம் நடக்கிறது.கோவையில் சிறுவாணி குடிநீர்
வினியோகிக்கப்பட்டு வந்தது. மக்கள் தொகை பெருக்கத்தினால், கூடுதல் குடிநீர்
ஆதாரத்திற்கு, பில்லூர் 2ம் குடிநீர் திட்டம் துவக்கப்பட்டது. இப்பணிகள்
தற்போது நிறைவடைந்துள்ளன. இத்திட்டத்தில் இன்று முதல் 15 நாட்களுக்கு
வெள்ளோட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள
குடிநீர் குழாய்களில், பில்லூர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியிலிருந்து,
ராமகிருஷ்ணாபுரம் வரையிலான 35 கி.மீ., தூரம், சோதனை பணி நடக்கிறது. நாள்
ஒன்றுக்கு ஐந்து மில்லியன் லிட்டர் தண்ணீர் சோதனைக்கு
பயன்படுத்தப்படுகிறது. இன்று துவங்கி 15 முதல் 20 நாட்கள் வரை இப்பணி
மேற்கொள்ளப்படும்.சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தவுடன், பொதுமக்களுக்கு
நாள் ஒன்றுக்கு 20 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட உள்ளது.
இதன் மூலம், மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதி, சூலூர் தாலுகா
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்னை தீர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


