மோடியின் உண்ணாவிரதச் செலவு எவ்வளவு? கணக்கு கேட்கிறார் கவர்னர்
மோடியின் உண்ணாவிரதச் செலவு எவ்வளவு? கணக்கு கேட்கிறார் கவர்னர்
மோடியின் உண்ணாவிரதச் செலவு எவ்வளவு? கணக்கு கேட்கிறார் கவர்னர்

ஆமதாபாத் : 'குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நடத்திய உண்ணாவிரதத்திற்கு, எவ்வளவு செலவானது என்பது குறித்த முழு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்' என்று, கவர்னர் கமலா பென்னிவால், மாநில அரசின் பொது நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில், கவர்னர் கமலா பென்னிவாலுக்கும், முதல்வர் நரேந்திர மோடிக்கும் இடையே நடக்கும் பனிப்போர், தற்போது முடிவதாக இல்லை.
இந்நிலையில், முதல்வர் நரேந்திர மோடி உண்ணாவிரதம் இருந்த, மூன்று நாட்களுக்கான செலவுக் கணக்கு குறித்த, முழு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்' என்று, கவர்னர் கமலா பென்னிவால், மாநில அரசின் பொது நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குஜராத்தில், சமூக நல்லிணக்கம், அமைதி ஆகியவற்றைப் பலப்படுத்தும் வகையில், 'சத்பாவனா மிஷன்' என்ற பெயரில், முதல்வர் நரேந்திர மோடி, அவரது பிறந்த நாளான கடந்த 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை, மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
மோடி அரசில் அமைச்சராக இருந்தவர் கோர்தான் சடாபியா. பின், பா.ஜ., கட்சியில் இருந்து சடாபியா விலகி, மகா குஜராத் ஜனதா என்ற கட்சியைத் துவக்கி, அதன் தலைவராக இருந்து வருகிறார். 'மக்களின் பொதுப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நரேந்திர மோடி உண்ணாவிரதம் இருந்தார்' என்று, சடாபியா குற்றம் சாட்டி, கவர்னருக்கு புகார் அனுப்பி இருந்தார்.
கவர்னர் கமலா, தன் செயலர் அர்விந்த் ஜோஷி மூலம், சடாபியா கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கும்படி, மாநில அரசின் பொது நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு, கடந்த 22ம் தேதி கடிதம் எழுதி இருந்தார். அதில், 'உண்ணாவிரதம் இருந்த மூன்று நாட்களில் செய்த செலவுகள், அதற்கான ஒப்புதல் எப்படி வழங்கப்பட்டது, என்ற முழு விவரத்தையும் தெரிவிக்க வேண்டும்' என்று கேட்கப்பட்டுள்ளது.