Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இயற்கை முறை ஆவியாக்கலால் "ஜீரோ டிஸ்சார்ஜ்' சாத்தியம்

இயற்கை முறை ஆவியாக்கலால் "ஜீரோ டிஸ்சார்ஜ்' சாத்தியம்

இயற்கை முறை ஆவியாக்கலால் "ஜீரோ டிஸ்சார்ஜ்' சாத்தியம்

இயற்கை முறை ஆவியாக்கலால் "ஜீரோ டிஸ்சார்ஜ்' சாத்தியம்

ADDED : ஜூலை 21, 2011 12:48 AM


Google News

திருப்பூர் : 'இயற்கை முறை ஆவியாக்கல் தொழில் நுட்பம் மூலமாக, சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பில் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' என்பது சாத்தியமாகிறது,' என, இந்திய தொழில்நுட்ப கழகம் அங்கீகாரம் வழங்கி பரிந்துரைத்துள்ளது.

திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரியின் பசுமை ஜவுளி இயக்கம் சார்பில், ஜெர்மன் தொழில் நுட்பத்தில், கழிவு நீரை இயற்கை முறையில் ஆவியாக்கும் வழிமுறை கண்டறியப்பட்டது.

மாசுக்கட்டுப்பாடு வாரிய அனுமதி யுடன், பெருந்துறை 'சிப்காட்' வளாகத்தில் உள்ள சாய ஆலையில், இயற்கை முறையில் சோதனை செய்வதற்கான கட்டமைப்பு கள் நிறுவப்பட்டன.மாசுக்கட்டுப்பாடு வாரியம் இத்தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டுமென, இந்திய தொழில்நுட்ப கழகத்துக்கு (ஐ.ஐ.டி.,) உத்தரவிட்டது. அதற்காக, 10 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டது. பெருந்துறையில் அமைக்கப்பட்ட கட்டமைப்பை ஆய்வு செய்த, தொழில்நுட்ப கழக பேராசிரியர்கள், சென்னையில் அதேபோன்ற மாதிரியை உருவாக்கி, ஆய்வு செய்தனர். கடந்த சில மாதங்களாக நடந்த ஆய்வை தொடர்ந்து, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்துக்கு சாத்தியமான தொழில்நுட்பம்' என்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.நிப்ட்-டீ கல்லூரி தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது:இயற்கை முறையில் ஆவியாக்கும் தொழில் நுட்பத்தை ஆராய்ச்சி செய்ததில், இந்திய தொழில்நுட்ப கழகம் 10 வகையான சாதகமான அம்சங்களுடன், அங்கீகாரம் வழங்கி பரிந்துரைத்துள்ளது. பெருந்துறையில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை முறையில் ஆவியாக்கும் தொழில்நுட்பம், இயந்திர முறை ஆவியாக்கலுக்கு சரியான மாற்று திட்டம்.உப்பை திரும்ப பெறுவதில் ஏற்படும் செலவு, இயந்திரத்தில் பெறுவதை காட்டிலும் குறைவாக உள்ளது. இயக்கச்செலவு குறைவாக இருப்பதால், இயற்கை முறை ஆவியாக்கல் தொழில் நுட்பத்தை பின்பற்ற வும், நிறுவுவதற்கும் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. இயந்திர முறை ஆவியாக்கலுக்காக, விறகு உள்ளிட்ட எரிபொருட் கள் தேவைப்பட்டன. இயற்கை முறை ஆவியாக்கலில் எரிபொருட்கள் முற்றிலும் தவிர்க்கப்படுகின்றன. இதனால், கார்பன் வெளியேற்றம் தவிர்க்கப்பட்டு, உலக வெப்பமயமாவது குறைந்து, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.

நீர்த்திவலைகள் காற்றில் மிதக்காமல் இருக்க, ஏற்படுத்தப்பட்ட தடுப்பு முறையும் திருப்திகரமாக செயல்படுகிறது. மழைக்காலத்தில் ஆர்.ஓ., கழிவுகளை சரியாக கையாள மாற்றுமுறை ஏற்படுத்தி, மாசுக்கட்டுப்பாடு வாரியம் முறையாக கண்காணிக்க வேண்டும். இயற்கை முறை ஆவியாக்கும் கலனை சுற்றி, காற்றின் தன்மை ஆராயப்பட்டத்தில், அனைத்து முடிவுகளும் நிர்ணயிக்கப்பட்ட வரைமுறைக்குள் உள்ளன.இயற்கை முறை ஆவியாக்கல் திட்டத்தை செயல்படுத்தும்போது, அதன் செயல்பாடு, ஆவியாக்கலுக்கு முன்னும், பின்னும் உப்பின் அளவு சரியாக உள்ளதா என்பதை மாசுக்கட்டுப்பாடு வாரியம் கண்காணிக்க வேண்டும். பிரித்தெடுக்கப்படும் உப்பு, மறு உபயோகத்துக்கு பயன்படுத்தப்பட வேண்டும் அல்லது சரியான முறையில் சேகரித்து வைக்கப்பட வேண்டும். இயற்கை முறை ஆவியாக்கலை செயல்படுத்தும்போது, காற்றின் தன்மை அவ்வப்போது கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.'இயற்கை முறை ஆவியாக்கல் தொழில்நுட்பம் மூலமாக, சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பில் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' என்பது நடைமுறை சாத்தியமானது' என்று இந்திய தொழில்நுட்ப கழகம் அங்கீகாரம் வழங்கி பரிந்துரைத்துள்ளது, என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us