/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சமச்சீர் கல்வி நிபுணர் குழு அறிக்கை எரிப்பு போராட்டம்சமச்சீர் கல்வி நிபுணர் குழு அறிக்கை எரிப்பு போராட்டம்
சமச்சீர் கல்வி நிபுணர் குழு அறிக்கை எரிப்பு போராட்டம்
சமச்சீர் கல்வி நிபுணர் குழு அறிக்கை எரிப்பு போராட்டம்
சமச்சீர் கல்வி நிபுணர் குழு அறிக்கை எரிப்பு போராட்டம்
ADDED : ஜூலை 11, 2011 11:10 PM
விருத்தாசலம் : சமச்சீர் கல்வி குறித்து அரசு நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கையை மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தினர் தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நடந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தாமரைகந்தன், பொருளாளர் காந்தி முன்னிலை வகித்தனர். சமச்சீர் கல்வியை வலியுறுத்தியும், நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் ஜங்ஷன் ரோட்டில் நிபுணர் குழு அறிக்கையின் நகலை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மனித உரிமை பாதுகாப்பு மைய நிர்வாகிகள் குணசேகரன், புஷ்பதேவன், கதிர்வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.