/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மழைக்காலம் துவங்க உள்ளதால் வடிகால் சீரமைப்பு பணி தீவிரம்மழைக்காலம் துவங்க உள்ளதால் வடிகால் சீரமைப்பு பணி தீவிரம்
மழைக்காலம் துவங்க உள்ளதால் வடிகால் சீரமைப்பு பணி தீவிரம்
மழைக்காலம் துவங்க உள்ளதால் வடிகால் சீரமைப்பு பணி தீவிரம்
மழைக்காலம் துவங்க உள்ளதால் வடிகால் சீரமைப்பு பணி தீவிரம்
ADDED : ஜூலை 11, 2011 11:05 PM
சிதம்பரம் : மழைக்காலம் துவங்க உள்ளதால் சிதம்பரம் நகரின் முக்கிய வடிகால் வாய்க்காலான தில்லையம்மன் வாய்க்காலில் ஆகாய தாமரை செடிகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
சிதம்பரம் நகரின் மேற்கு பகுதி மற்றும் பெரும்பாலான நகர் பகுதியின் முக்கிய வடிகாலாக தில்லையம்மன் வடிகால் வாய்க்கால் உள்ளது. மழைக்காலங்களில் மழை மற்றும் வெள்ளத்தால் சிதம்பரம் நகரில் தேங்கும் தண்ணீர் இந்த வாய்க்கால் மூலமாக பாலமான் ஆற்றில் வடிகிறது. ஆண்டுதோறும் இந்த வாய்க்காலில் ஆகாயத்தாமரை செடிகள் அடைத்துக்கொண்டு தண்ணீர் வடியாமல் கடுமையாக பாதிக்கப்படும். இந்த ஆண்டு மழை துவங்குமுன்பே நகராட்சி நிர்வாகம் வாய்க்கால் சீரமைப்பு பணியை துவங்கியுள்ளது. ஆகாய தாமரை செடிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி வாய்க்கால் சீரமைக்கப்பட்டு வருகிறது.