Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/பெரியாறு அணை அருகே கேரள பொறியாளர் குழு ஆய்வு

பெரியாறு அணை அருகே கேரள பொறியாளர் குழு ஆய்வு

பெரியாறு அணை அருகே கேரள பொறியாளர் குழு ஆய்வு

பெரியாறு அணை அருகே கேரள பொறியாளர் குழு ஆய்வு

ADDED : ஜூலை 11, 2011 10:54 PM


Google News

கூடலூர் : பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணைக்கு செல்லும் பெரியாற்றில் கேரள பொறியாளர் குழு இரண்டாம் கட்ட ஆய்வுப்பணியை நேற்று துவக்கியது.

பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் உள்ள தண்ணீர், அணையை ஒட்டியுள்ள ஷட்டரில் வெளியேறி இடுக்கி அணையை சென்றடையும். பெரியாறு அணை உடைந்தால், இடுக்கி அணை வரை உள்ள 40 கி.மீ., தூரத்தில் ஆற்றின் கரைப்பகுதியில் பாதிப்பு ஏற்படும் எனன கேரள அரசு கூறி வருகிறது.



இதனால், அணையில் இருந்து இடுக்கி அணை வரை எத்தகைய சேதம் ஏற்படும் என்பது குறித்து ஆய்வு நடத்த, கேரள அரசு 2008ல் உத்தரவிட்டது. கேரள பொறியாளர் குழு, ஆல்வா தனியார் கம்பெனியின் துணையுடன் அப்போது ஆய்வுப்பணியைத் துவக்கியது. அணையில் இருந்து 10 கி.மீ., தூரம் பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதியாக இருந்ததால், அப்பகுதியில் ஆய்வு நடத்தவில்லை. அதற்கு அடுத்து உள்ள 14 கி.மீ., தூரம் மட்டும் ஆய்வுப்பணியை நடத்தி முடித்தது.



ஆய்வு: நீர்ப்பாசனத்துறை பொறியாளர்கள் டேவிட், விஸ்வநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட பொறியாளர் குழு இரண்டாம் கட்ட ஆய்வை நேற்று துவக்கியது. வண்டிப்பெரியாரில் இருந்து இடுக்கிஅணை வரை உள்ள 14 கி.மீ., தூரத்தில் நடைபெறும் இந்த ஆய்வு இரண்டு வாரத்தில் முடிவடையும். அதன்பின் அறிக்கையை, இக்குழு கேரள அரசிடம் சமர்ப்பிக்கும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us