Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/வைகையில் கழிவுநீர்: தடுக்க கோரிக்கை

வைகையில் கழிவுநீர்: தடுக்க கோரிக்கை

வைகையில் கழிவுநீர்: தடுக்க கோரிக்கை

வைகையில் கழிவுநீர்: தடுக்க கோரிக்கை

ADDED : செப் 01, 2011 11:43 PM


Google News

மதுரை : மதுரை வைகையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உணவு பொருள்

வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியது.

மதுரையில் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் ஜெயப்பிரகாசம் தலைமையில் நடந்தது. ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ., செயலாளர் வேல்சங்கர், பொருளாளர் கதிர்வேல், துணை தலைவர்கள் முனியப்பன், சுபாஷ்சந்திரபோஸ், தெய்வராஜன், இணை செயலாளர்கள் பாலசுப்ரமணியன், கார்த்திகேயன், ஜெயகர் பேசினர். நிர்வாகிகள் எம்.எல்.ஏ.,விடம் வழங்கிய மனுவில் கூறியதாவது: மாரியம்மன் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க வேண்டும். வண்டியூர் கண்மாயில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கி, படகு சவாரி விட வேண்டும். மாநகராட்சி எல்லையில் பழுதான குண்டும் குழியுமான ரோடுகளை சரி செய்ய வேண்டும். பழைய சென்ட்ரல் மார்க்கட் செயல்பட்ட இடத்தில் பல அடுக்கு மாடிகள் கொண்ட பார்க்கிங் வசதியை ஏற்படுத்த வேண்டும். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை நகருக்கு வெளியில் கொண்டு செல்ல வேண்டும். வெங்கலகடைத்தெருவில் காலை 11 முதல் பகல் 3 மணிக்குள் லாரிகளை அனுமதிக்க வேண்டும். குடிநீர் ஆதராமான வைகை அணையில் 20 அடியுள்ள சேறும், சகதியை அகற்ற, ரூ.150 கோடியிலான திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதுகுறித்து அரசை வலியுறுத்த வேண்டும், என்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us