ADDED : ஜூலை 14, 2011 10:35 AM
மதுரை: மதுரை மணியம்மை துவக்கப் பள்ளியில், புரட்சி கவிஞர் மன்றம் சார்பில், தமிழிசைப் பண் வரலாறு குறித்த கருத்தரங்கு நடந்தது.
பேராசிரியர் பாலசுப்பிரமணி வரவேற்றார். பள்ளித் தாளாளர் வரதராஜன் தலைமை வகித்தார். இசை அறிஞர் மம்மது பேசியதாவது: கர்நாடக இசையும்
தமிழிசையும் ஒன்று. தமிழிசையில் உருவானதே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்தினை.ஆகும். இந்தியா முழுமைக்குமான ஒரே இசை ஆதி இசை தமிழிசை தான் என்றார். இந்தியன் வங்கி முதுநிலை மேலாளர் மோகன், பத்திரப்பதிவுத் துறை பதிவாளர் சரவணன், பேராசிரியர்கள் சுந்தரம், ராமசாமி, கோவிந்தன் கலந்து கொண்டனர்.