Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பிளஸ் 2 மாணவர்கள் சாதனைக்கு புதிய முயற்சி

பிளஸ் 2 மாணவர்கள் சாதனைக்கு புதிய முயற்சி

பிளஸ் 2 மாணவர்கள் சாதனைக்கு புதிய முயற்சி

பிளஸ் 2 மாணவர்கள் சாதனைக்கு புதிய முயற்சி

ADDED : ஆக 03, 2011 12:58 AM


Google News

ராமநாதபுரம் : பிளஸ் 2 மாணவர்கள் பொது தேர்வில் சாதனை படைக்க, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற பல்வேறு நிறுவனங்களின் கையேடுகளை வாங்கி படிப்பர். நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடும் இந்த கையேடுகளால், மாணவர்கள் பல்வேறு குழப்பத்துக்கு ஆளாகின்றனர்.



இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கல்வி துறை மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிர்வேதியியல் போன்ற பாடங்களுக்கான கையேடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் இடம் பெற்றுள்ள கேள்வி, பதில்கள் அனுபவம் மிகுந்த ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் முக்கிய வினாக்கள், பதில்கள், பயிற்சிகள், பழைய வினாத்தாள்கள், பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வடிவமைப்பு, கருத்துள்ள பொன்மொழிகள், நினைவாற்றல் மேம்படுவதற்கான வழிகள் இடம் பெற்றுள்ளன.



மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: இதன் மூலம் படிப்பு சுமையல்ல என்பதை மாணவர்களுக்கு புரிய வைக்க முடிகிறது. இந்த பாடங்களை படித்தால், 100 சதவீதம் தேர்வில் வெற்றி பெற முடியும். இதன் மூலம் 60 சதவீத மதிப்பெண்களை எளிதில் பெற முடியும். இந்த புத்தகங்கள் மாவட்டத்தில் முதலில் படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது, என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us