/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம்மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம்
மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம்
மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம்
மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம்
ADDED : ஆக 26, 2011 12:10 AM
புவனகிரி : கீரப்பாளையம் வட்டார வள மைய அலுவலகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்று திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.
முகாமை ஒன்றிய உதவி தொடக்க கல்வி அலுவலர் சந்திரலேகா துவக்கி வைத்தார். ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 149 மாற்றுத்திறனாளிகளை டாக்டர்கள் சுரேஷ்ராஜ், வனிதா, சத்தியமூர்த்தி, சுமதி உள்ளிட்ட குழுவினர் பரிசோதித்து சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். முகாமில் ஆசிரியர் பயிற்றுனர்கள் மனோகர், சுமதி,சிறப்பாசிரியர்கள் சுஜாதா, கல்பனா, வனிதா, சுந்தர்ராஜன், மீரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


