/உள்ளூர் செய்திகள்/தேனி/போடி பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கப்பணியில் 10 மாதங்களாகியும் பணிகள் நடக்கவில்லைபோடி பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கப்பணியில் 10 மாதங்களாகியும் பணிகள் நடக்கவில்லை
போடி பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கப்பணியில் 10 மாதங்களாகியும் பணிகள் நடக்கவில்லை
போடி பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கப்பணியில் 10 மாதங்களாகியும் பணிகள் நடக்கவில்லை
போடி பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கப்பணியில் 10 மாதங்களாகியும் பணிகள் நடக்கவில்லை
ADDED : செப் 06, 2011 12:56 AM
போடி : போடி பஸ்ஸ்டாண்ட் விரிவாக்க பணிகள் துவங்கி,பத்து மாதங்களுக்கு மேலாகியும் நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தால்,பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
தமிழக-கேரள பகுதிகளை இணைக்கும் மையமாக போடி பஸ்ஸ்டாண்ட் அமைந்துள்ளது.மூணாறு,போடிமெட்டு, பூப்பாறை, நெடுங்கண்டம், உடும்பஞ்சோலையிலிருந்து மருத்துவம், கல்வி உட்பட பல்வேறு தேவைகளுக்காக போடி வந்து செல்கின்றனர். இதை கருத்தில் கொண்டு பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கப்பணிகளுக்கு திட்டமிடப்பட்டது. 13 ஆண்டுகளுக்கு முன் பணிகள் துவங்கியும் குடிநீர், ரோடு, பயணிகள் நிழற்குடை போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. பஸ்ஸ்டாண்ட் பகுதி குண்டும், குழியுமாக உள்ளதால், பஸ்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இயக்குதல் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்புதல் திட்டத்தின் கீழ், 68 லட்சம் ரூபாய் மதிப்பில் பஸ்ஸ்டாண்டில் சிமெண்ட் ரோடு, சாக்கடை மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள, 10 மாதங்களுக்கு முன் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கின.அவை துவக்கப்பட்ட நிலையிலே கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் கற்குவியல்களில் மக்கள் நடக்க முடியவில்லை.விரிவாக்கப்பணிக்காக, ஒரு பாதை அடைக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்கள் அந்தந்த பிளாட்பாரங்களில் நிற்காமல் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தப்படுவதால் சிரமம் ஏற்படுகிறது. விரிவாக்கப்பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.