Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நெட்டப்பாக்கத்தில் மாணவர் பஸ் வராததால் கடும் அவதி

நெட்டப்பாக்கத்தில் மாணவர் பஸ் வராததால் கடும் அவதி

நெட்டப்பாக்கத்தில் மாணவர் பஸ் வராததால் கடும் அவதி

நெட்டப்பாக்கத்தில் மாணவர் பஸ் வராததால் கடும் அவதி

ADDED : ஆக 03, 2011 10:25 PM


Google News

நெட்டப்பாக்கம் : மாணவர்கள் சிறப்பு பஸ் நெட்டப்பாக்கம், பண்டசோழநல்லூர் பகுதிகளுக்கு வராததால், அப்பகுதி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

நெட்டப்பாக்கத்திற்கு இயக்கப்படும் மாணவர்கள் சிறப்பு பஸ், பண்டசோழநல்லூர், செம்படபேட்டை, நெட்டப்பாக்கம், நடுநாயகபுரம் ஆகிய பகுதிகளுக்கு வராமல், மடுகரையிலிருந்து கல்மண்டபம் மார்க்கமாக புதுச்சேரிக்கு செல்கின்றன. மடுகரையில் இருந்து நெட்டப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் கரியமாணிக்கம் மெயின் ரோட்டில் இறக்கி விடப்படுகின்றனர். அங்கிருந்து மாணவர்கள் ஒரு கி.மீ., தொலைவு பள்ளிக்கு நடந்து செல்கின்றனர். மேலும், இங்கு சிறப்பு பஸ் வராததால், இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி, தனியார் பஸ்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி, மடுகரையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் மாணவர்கள் சிறப்பு பஸ், பண்டசோழநல்லூர், நெட்டப்பாக்கம் பகுதிகளுக்கு வந்து மாணவர்களை ஏற்றி செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us