/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கொலை மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீது வழக்குகொலை மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீது வழக்கு
கொலை மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீது வழக்கு
கொலை மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீது வழக்கு
கொலை மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 13, 2011 12:58 AM
கள்ளக்குறிச்சி : கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்
பதிந்தனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி வட்ட
செயலாளராக இருப்பவர் சத்தியராஜ்(23). இவர் நேற்று முன்தினம் வரதப்பனூர்
கிராமத்தை சேர்ந்த தீனாவின் ரேஷன் கார்டு பெயர் மாற்றத்திற்காக
கள்ளக்குறிச்சி குடிமை பொருள் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு
தினக்கூலியாக பணியாற்றும் கருணாநிதி என்பவர் சத்தியராஜிடம் தகராறு
செய்துள்ளார்.பின்னர் கச்சேரி சாலையில் சென்ற சத்தியராஜை வழிமறித்து
கருணாநிதி உட்பட நான்குபேர் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின்
பேரில் கரு ணாநிதி உட்பட 4 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்
பதிந்தனர்.