கள்ளக்குறிச்சி : மனித உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.கள்ளக்குறிச்சி அம்பேத்கார் சிலை முன்பு நடந்த போராட்டத்திற்கு மாநில தலைவர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.
ஒழுங்கு நடவடிக்கை குழு செயலாளர் கல்யாணசுந்தரம் துவக்கி வைத்தார். நிர்வாகிகள் செல்வராஜ், ராமச்சந்திரன், மனோகரன் கலந்து கொண்டனர். அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட ஆண்டுதோறும் டி.என்.பி.சி., குருப்-4 தேர்வினை நடத்த வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பலரும் பேசினர்.