ADDED : ஆக 21, 2011 02:29 AM
தேன்கனிக்கோட்டை: தளி அருகே மாந்தோப்பில் விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தளி அருகே கொத்தனூர் அடுத்த திப்பையன் அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர் காக்கி எல்லப்பா (65). இவர் கடந்த 14ம் தேதி திருப்பதி கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். அதன் பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வரை பல்வேறு இடங்களில் தேடினர். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் காக்கி எல்லப்பா தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். கொத்தனூர் வி.ஏ.ஓ., முனிராஜ் தளி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். தளி எஸ்.ஐ., ரவிச்சந்திரன் விசாரிக்கிறார். காக்கி எல்லப்பா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாராவது அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என விசாரிக்கின்றனர்.


