மூவர்ண கொடிஅவமதி்ப்பு: ஹசாரே மீது வழக்கு
மூவர்ண கொடிஅவமதி்ப்பு: ஹசாரே மீது வழக்கு
மூவர்ண கொடிஅவமதி்ப்பு: ஹசாரே மீது வழக்கு
UPDATED : ஆக 19, 2011 09:32 AM
ADDED : ஆக 19, 2011 07:29 AM
முஷாபரபூர்: வர்த்த நிகழ்ச்சி ஒன்றிற்காக தேசிய கொடியை அவமதித்ததாக காந்தியவாதி அன்னா ஹசாரே உள்ளிட்ட எட்டு பேர் மீது பீகார் கோர்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பீகாரைச் சேர்ந்தவர் சுதீர்குமார் ஒஜா. இவர் பீகார் மாநிலம் முஷாபரபூர் மாவட்ட ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்டில் வழக்கு ஒன்றை தொடுத்தார். அதில் கடந்த 12-ம் தேதி தனியார் டி.வி. வர்த்தக நிகழ்ச்சியில் நாட்டின் மூவர்ண கொடியினை காண்பித்துள்ளனர். இது 1971-ம் ஆண்டு தேச மரியாதைகுறித்த வழிகாட்டுதல் சட்டம் 2 மற்றும் 5 பிரிவின் கீழ் அவமரியாதையான செயலாகும். இந்த நிகழ்ச்சியில் காந்தியவாதி அன்னா ஹசாரே, அரவிந்த் கேஜிரிவால் உள்ளிட்ட எட்டுபேர் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். வழக்கை விசாரித்த முதன்மை ஜூடிசியல் நீதிபதி மித்லியேஸ்குமார், விசாரணையை செப்டம்பர் 12-ம் தேதி ஒத்தி வைத்தார்.