Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு விருது

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு விருது

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு விருது

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு விருது

ADDED : ஜூலை 19, 2011 05:27 PM


Google News
கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு 2010ம் ஆண்டின் சிறந்த கல்வி நிறுவனத்திற்கான சர்தார் வல்லபாய் பட்டேல் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதை, தலைநகர் டில்லியில் ஜூலை 16ம் தேதி அன்று நடந்த விழாவில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் சரத்பவாரிடமிருந்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் முருகேச பூபதி பெற்றுக் கொண்டார். ரூ. 5 லட்சத்திற்கான காசோலை, பாராட்டுப் பத்திரம் மற்றும் கேடயத்தை உள்ளடக்கிய இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக, வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us