ஏரி, கால்வாய்களை சீரமைக்க ரூ.116 கோடி நிதி ஒதுக்கீடு : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
ஏரி, கால்வாய்களை சீரமைக்க ரூ.116 கோடி நிதி ஒதுக்கீடு : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
ஏரி, கால்வாய்களை சீரமைக்க ரூ.116 கோடி நிதி ஒதுக்கீடு : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
ADDED : ஆக 11, 2011 10:58 PM

சென்னை: காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள ஏரிகள் மற்றும் கால்வாய்கள், அணைக்கட்டுகள் ஆகியவற்றை சீரமைத்து, பாசன வசதிகளை மேம்படுத்திட 116 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.சட்டசபையில், விதி 110ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு பேசியதாவது: நீர்வள நிலவள திட்டத்தின் ஒரு அங்கமாக, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டவங்களில் உள்ள அடையாறு உப வடிநிலத்தின் கீழ் உள்ள முறைசார்ந்த மற்றும் முறை சாரா ஏரிகள் மற்றும் கால்வாய்களை, 31 கோடியே 19 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து, நவீனப்படுத்த நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளேன்.இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாக்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் மற்றும் பூந்தமல்லி தாலுகாக்களில் உள்ள, 45 ஆயிரத்து 597 ஏக்கர் ஆயக்கட்டு நிலங்களின் பாசன வசதி மேம்பாடு அடையும்.காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள கிளியாறு உப வடிநிலம் மற்றும் செய்யாறு உப வடிநிலத்தின் ஒரு பகுதியின் கீழ் உள்ள ஏரிகள், அணைக்கட்டுகள் மற்றும் நீர் வழங்கு கால்வாய்களை, 84 கோடியே 88 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து நவீனப்படுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளேன்.இதன் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய ஒன்றியங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம், செய்யாறு, அன்னக்காவூர், வந்தவாசி, பெரணமல்லூர், தெள்ளாறு மற்றும் மேற்கு ஆரணி ஆகிய ஒன்றியங்களில் உள்ள 453 ஏரிகள் மற்றும் இரண்டு அணைக்கட்டுகளின் கீழ் உள்ள 91 ஆயிரத்து 81 ஏக்கர் ஆயக்கட்டு நிலங்களின் பாசன வசதி மேம்பாடு அடையும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.